1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் லில்லி சண்முகநாதன்
இளைப்பாறிய ஆசிரியை- ஏழாலை, பிரான்ஸ்
வயது 82
Tribute
29
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லில்லி சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒராண்டு நீயின்றிக்
கழிந்த பொழுதுகள்
நூறாண்டு பாலையிலே
தனித்திருந்த துன்பமம்மா!
பேராண்ட பரம்பரையின்
பெருமகளாய் வந்தவரே
நூலாண்ட பலனையெல்லாம்
நுண்ணறிவாய்த் தந்தவரே!
ஊராண்டு உலகுள்ளோர்
உளமாண்டு அன்பாலே
காராண்ட வானம் போல்
கருணையாய்ப் பொழிந்தவரே!
தேரோடும் தேவன் வந்து- எம்
தென்றலினை அழைத்தாரே
நீராடும் விழியோடு அந்த
நிர்மலனை வேண்டுக்கின்றோம்
உம் ஆன்மா அமைதியிலே இளைப்பாற!!
தகவல்:
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்