மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லீலாவதி சிவக்கொழுந்து அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்
ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு மூன்று ஆனதிப்போ
நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!
இந்த மண்ணில் உம்மைப் போல்
யார் வருவார்?
எம் துயர் போக்க
எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
பாசத்திற்கும் பண்பிற்கும்
அரவணைப்பிற்கும் பாரில்
இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே!
உங்கள் முகம் கண்டு
ஆண்டு மூன்று ஆனதோ அம்மா...!
நேசத்துக்கு என எங்களைப்
பெற்றெடுத்து ஆளாக்கி
பேணிக்காத்து பெருவாழ்வு
எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு
ஆண்டு மூன்று ஆனதோ!
மரணம் உங்களை எங்களிடம்
இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை
பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை
விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!