1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் லீலாவதி சிவக்கொழுந்து
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 83
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லீலாவதி சிவக்கொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களின் குடியிருந்த
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே!
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து
பாரினிலே எம்மை தவிக்கவிட்டது ஏனம்மா?
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே!
ஈராறு மாதங்கள் கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில்!
நீங்கள் இல்லை என்பதையே
உணர மறுக்கிறது எம் இதயம்!
உங்கள் மடியில் நாம்
இளைப்பாற வேண்டும் என்றோம்!
ஆனால் இறைவன் மடியில் இளைப்பாற
நீங்கள் சென்றதேனோ, ஆறவில்லை எம் இதயம்!
ஓராண்டு சென்றாலும் உங்கள் நினைவு என்றும் நீங்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்