
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் பிள்ளையார் வீதியை வதிவிடமாகவும், ஜேர்மனி stuttgart asperg ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சரவணமுத்து அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், இராமலிங்கம் குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
புவனாம்பிகை(பிரான்ஸ், முன்னாள் தபால் அதிபர் யாழ்ப்பாணம்), ருக்குமணி(முன்னாள் ஆசிரியை இராமநாதபுரம்), அகிலாண்டநாயகி(ஜேர்மனி), தவசக்தி(ஜேர்மனி), ஸ்ரீகாந்தன்(சிவா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பழனிவேல், முத்துவேல், தங்கரத்தினம், செல்லமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரட்ணம், செல்வராசா, குகராஜா, மகேந்திரகுமார், சுமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயதீபன்- ரஜி, வித்தியாகரன்- வேதிகா, அருணன், மாதினி- சுரேந்திரன், தாரணி- உமாபாலன், செந்திற்குமரன், தாட்சாயினி(ஜனனி)- டர்சன், அஸ்வினி, சாயினி, காவியா- வினூஷன், விவேகா, லோஜினி, கிருஷியன், தேனுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்ஷயா, அனுருத் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
அன்னாரின் மறைவால் துயருறும் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆறுதலும் சாந்தியும் நிம்மதியும் அடைய இறைவன் துணை புரிவாராக.