

உங்கள் எதிர்பாராத பிரிவு அறிந்து மனம் வலிக்கிறது. அதிர்ந்து பேசத் தெரியாத நீங்கள் அதிராமலே சென்று விட்டீர்கள் எமக்காக கவலைப்பட்டு ஆறுதல் புத்திமதி கூறுவீர்கள். கவலை என்றால் பரிகாரமும் கூறுவீர்கள். இன்று உங்களையே இழந்து விட்டோம். யார் எமக்கு ஆறுதல் கூறுவர். மாதவாவைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வீர்கள் இப்பொழுது மாதவா உங்கள் இதயம் இயங்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டுகிறான். இதனை எப்படி உங்களிடம் சொல்வது?அம்மாவை கவனமாக பார்ப்பீர்கள் இனி யார் கவனிப்பது? நான் பிறந்தவுடன் முதல் உங்கள் கைகளால் தைத்த உடுப்பை அணிந்து அழகு பார்த்தீர்கள். அன்றிலிருந்து இன்றுவரை பாசமாகவே இருந்தீர்கள். ஜிந்தன் அண்ணா சூட்டியுடன் நாங்கள் லண்டனில் நடக்கும் சந்தோஷமான நிகழ்வுகளை தொலைபேசியில் கதைப்போம், ஆனால் இன்று உங்கள் பிரிவுத் துயர் பகிறுகிறோம். உங்கள் இழப்பு ஈடு செய்யமுடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்!!! ஓம் நமசிவாய சிவாய நம ஓம்!!! ஓம் நமசிவாய சிவாய நம ஓம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!