Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 SEP 1961
இறப்பு 19 AUG 2025
அமரர் இலட்சுமணன் நகுலேஸ்வரன் (நகுலன்)
பிரபல வர்த்தகர்
வயது 63
அமரர் இலட்சுமணன் நகுலேஸ்வரன் 1961 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:07/09/2026
 
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கரணவாய் மத்தி சுமதி இல்லம் மூத்த விநாயகர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணன் நகுலேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!

அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே
பொன்ணை வாழ்வு தனை
போற்றி வளர்த்த அப்பாவே!

உங்களோட மட்டுமல்ல
உங்கள் நினைவுகளோடும்
நாம் வாழ்ந்த நாட்களை யார் மறப்பார்!

எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச்
சென்று ஓராண்டு காலமாகிறதே!

ஓராண்டு என்ன ஓராயிரம் வருடங்கள் 
ஆனாலும் உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

நாம் மகிழ்ச்சியாக இருக்க 
நம்மிடம் ஆயிரம் விடியல்கள் 
இருந்தாலும் சோகத்தை பகிர 
ஒரு நல்ல துணையாக இறைவன்
 நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!!

அப்பா உங்கள் குரல் எங்கள் காதுகளில் 
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா! 
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் 
புன்முறுவல் பூப்பூத்தவதனமாய் 
இருந்து கொண்டே இருக்கும்..!

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
 மருமக்கள், பேரப்பிள்ளைகள்

உங்கள் ஆத்மா ஆண்டவனின் 
திருவடியில் அமைதி பெற வேண்டுகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 19 Aug, 2025