

கண்கள் ததும்ப நெஞ்சம் கனக்க கொஞ்சி உம்மை வழியனுப்ப இயலாது ஏங்கும் உறவுகள் எம்மைத் தவிக்கவிட்டு தனிவழி சென்றேதேனோ எங்கள் கொடுப்பனவின் கோலமிதுதானோ,நோயே உனக்கொரு நோய் வந்து சேராதோ?சாவுக்கொருநாள் சாவுவந்துசேராதோ? சுட்டெரிக்கும் தீயே உன்னை நாம் தீயிலிட்டுப் பாரோமோ? முன்பிழந்த உறவுகளோடு உறவாட என்ன அவசரம் உமக்கு? இறை உலகம் எய்திட்ட எம்முயிரே எங்கள் எண்ணங்களிலும் மனங்களிலும் செபங்களிலும் உம்நினைவுநீங்காது. நித்திய இளைப்பாற்றியை இறைவன் உமக்கு அருள்வாராக! முடிவில்லாத ஒளி உம்மேல் ஒளிர்வதாக! எங்களுடன் கலங்கி நிற்கும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக! ." அம்மா, அம்மா, அன்பின் வடிவம் நீ தானம்மா "
In this sorrowful time, we would like to extend the family our heartfelt condolences. May the Lord bless and comfort the you all during this time of grief. With Deepest Sympathy