Clicky

பிறப்பு 22 OCT 1966
இறப்பு 21 DEC 2019
அமரர் லலிதா நவரட்ணம்
வயது 53
அமரர் லலிதா நவரட்ணம் 1966 - 2019 துணுக்காய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மா.பாஸ்கரன் 29 DEC 2019 Germany

தமிழோடு நிலைத்திருப்பீர்! வாழும் காலம் குறுகியதாயினும் தமிழ் வாழத் துணைகொண்டவராக தமிழ்க் கல்விக் கழகத்தோடவராய் புன்முறுவலோடு இணைந்தே நடந்தார்! பொதுப் பணியாற்றிடும் வேகத்தோடு உடற்பிணி மறந்து உழைத்தவரின்று உறங்கிவிட்டமை இறைசெயலாயினும் உங்கள் பணியெற்றும் உறங்கிடாது! புலம்பெயர் தேசமாம் யேர்மனியிலே தமிழ்ப்பணி வாழும் காலம் வரையிலும் உங்கள் பணியென்றும் வாழுமென்பதே மெய்நிலை கொண்ட வாழ்வாகுமன்றோ! பூதவுடலது மறைந்திடும் போதிலே புகழுடலாக உங்கள் செயலது வாழும் வாழும் வாழ்விலே இன நலன் தேடியே வாழ்ந்த காலமே நிலையாக வாழுமே! காலையில் பார்ப்போம் என்றே நாமும் காத்திருந்த முன்னிரவுப் பொழுதிலே ஆழ்ந்த துயரது சூழ்ந்த பொழுதாய் பிரவுத் துயர்ச்செய்தி எமை வாட்டியதே! தமிழ்ப் பணியில் ஒன்றிணைந்து கடந்து சென்ற காலங்க ளென்றுமே மறந்துவிட முடியாத காலங்களன்றோ காலத்தை நிறைவாக்கி கடந்து விட்டீர்! செயல்களாய் வாழுமிந்தப் பூவுலகில் இயற்கை அளித்த யாக்கை யதை இயற்கையது உள்வாங்கிக் கொண்டாலும் செயல்களால் எம்மோடு நிலைதிருப்பீர்! ஆழ்ந்த இரங்கலுடன் சக செயற்பாட்டாளர்கள் தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 25 Dec, 2019