
யாழ்ப்பாணம் சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட லலித்தா அலெக்சாண்டர் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொலமன் அன்ரனி சந்தியாகோ, மேரி மக்ரலின் தங்கமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஜோசபின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அந்தோனிப்பிள்ளை அலெக்சாண்டர் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனிற்றா, றுக்ஷான், மிறோஷன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற சொலமன் செகராஜசிங்கம் சந்தியாகோ, மரிஸ்ரெல்லா பத்மினி, காலஞ்சென்ற கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெசிந்தா சச்சிதானந்தம், மரியராணி, ஜெராட் மரியநாயகம், றெஜினா வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்ரன் மரியசேவியர், பிரஷாந்தி, அபிராமி, திலிப், தினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரியங்கா, றேணுக்கா, றொஷான், டிலுக்ஷான், தர்ஷிக்கா ஆகியோரின் சிறிய தாயாரும்,
மேரி அக்ஷயா, அபினாஸ், மெரின் அன்றியா, சோர்ஜேனியா, எய்டன், குருசயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 28-12-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 878, ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடல் நல்லடக்கத்திற்காக கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.