யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto, Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லக்ஷ்மி நித்தியானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பு அம்மாவே
நீங்கள் எமைப் பிரிந்து
மாதம் ஒன்று விட்டது
ஆயிரம் ஆயிரம்
உறவுகள் இருந்தாலும்
அம்மா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை...
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால்
எம்மை நாடறிய வைத்தீர்கள்
குடும்பத் தலைவியாய்
கடமையில் ஆசானாகவும்
இவ்வுலகில்
மிளிர்ந்தீர்கள்!
உங்கள் புன்சிரிப்பு நித்தம்
எமை வாட்டுகின்றது அம்மா
இன்றுடன் 31 நாட்கள்
ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We miss you Sinnamma. We have no words to express our thoughts of you! All of your memories always in our hearts!!!