

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Toronto, Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த லக்ஷ்மி நித்தியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அம்மாவுக்கு ஓராண்டு நினைவஞ்சலி
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும் அரவணைத்த
எம் அன்புத் தெய்வமே நீங்கள்
மீளாத் துயில் கொண்டு ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள் எம்முள்ளே
நித்தமும் அலைமோதிய வண்ணம் உள்ளது அம்மா!!!
உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில் உங்கள்
வழியிலேயே உங்கள் பின்னால் நடந்தோம் அம்மா..
ஆனால் இன்று கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்...
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை! அம்மா!
உன் இனிமையான நினைவுகளை நினைக்கும் போது
நிலைகுலையச் செய்யுதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய நித்தமும் அந்த
இறைவனைப் பிரார்த்தனை செய்து பூசிக்கின்றோம் அம்மா...
We miss you Sinnamma. We have no words to express our thoughts of you! All of your memories always in our hearts!!!