யாழ். அரியாலை ஆனந்தன் வடலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட லஷ்மிதேவி கிருஸ்ணகோபால் அவர்களின் நன்றி நவிலல்.
சிந்தனைச் சிற்பியாய் சிறந்த நல் மனைவியாய்
வந்தனை செய்தே நல்வளமான வாழ்வு தந்தாயே !!
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
உந்தனை நினைக்கையிலே உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம் என் செய்வோம்
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!!
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.