யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குருநாதி கதிரேசு அவர்களின் நன்றி நவிலல்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாக தொடர்புகொண்டும் எம் துயரில் பங்குகொண்டோர் மற்றும் இணையத்தளங்கள் வழியாக ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர், மலர் அஞ்சலிகள் செலுத்தியோர், ஆறுதல் தெரிவித்தோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.