யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குருநாதி கதிரேசு அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், குருநாதி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம்(கிளி ரீச்சர்- முன்னாள் ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற இந்திராதேவி, ரேவதிதேவி, குகதாஸ்(சுவிஸ்), மோகனாதேவி, பிரேமாதேவி, விமலாதேவி, வசந்தாதேவி, விஜயகுமாரி, சாந்தகுமாரி(சுவிஸ்), நந்தகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியசீலன், கோசலா(சுவிஸ்), ஜெகதீஸ்வரன், சதாசிவம், சிவகுமார், அலோசியஸ், உதயகுமாரன், சந்திரகுமாரன்(சுவிஸ்), யோகேஸ்வரி ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்ற குருநாதி முருகேசு அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கம் திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சாருஜன், நிரூஜா, நிராகுலன், Kareeshan-Annai, Kareeshiga, Ajanthan-Shinthu, Ashley-Gowresh, Jaysan, Tysan, Kesei, Durga, Chrishan, Robina, Vimogchen, Keshani, Ajith, Vinith, Arjun, Abirami ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 முதல் பி.ப 02:00 மணிவரை Lotus Funeral and Cremation Centre எனும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.