3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குணரத்தினம் யோகம்மா
வயது 94
அமரர் குணரத்தினம் யோகம்மா
1926 -
2020
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் யோகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குலவிளக்கே...
நேற்று நடந்தது போல் இருக்கின்றது-
மனதை ரணமாக்கிவிட்டுப்போன அந்த நாள்...
பாசத்தால் அரவணைத்து,
பண்புடன் வாழ வேண்டும்
என அறிவுரைகள் பல கூறி,
எமது வாழ்க்கையின்
வழிகாட்டியாய் இருந்தீர்கள்.
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும் ஆனால்
என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!
தகவல்:
குடும்பத்தினர்