1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் குணரத்தினம் யோகம்மா
வயது 94
அமரர் குணரத்தினம் யோகம்மா
1926 -
2020
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 22-11-2021
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் யோகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் ஆருயிர் அம்மா!!
ஆண்டுகள் ஒன்று ஓடியதே
எங்களின் உயரிய ஒளி நிலவே
எமை நீக்கி மறைந்தீர்கள் அம்மா!
எம் வாழ்வில் வசந்தமாக வாசம் வீசி
வாழ்க்கையை ஒளி ஊட்டினீர்கள் அம்மா!
மீண்டும் வருமா வசந்தம் என்ற
தொடரான கேள்விகளோடு
தொடர்கின்றது
எம் கண்ணீர் பயணம் அம்மா!
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
உன் நினைவால் நித்தம் வாடுகின்றோம்.....
சென்ற இடம் கூராயோ காலத்தின் கோலம்
எங்களிடம் இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் அம்மா...!
தகவல்:
குடும்பத்தினர்