யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் மகாலக்ஸ்மி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!
உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இனை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து எங்களுக்கு உயிர்கொடுத்தாய்
இன்று நீங்கள் இன்றி எங்கள் உயிர் விலகி நிற்கின்றது அம்மா
ஆண்டுகள் ஒன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்...