1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குணநாதன் வினோதினி
வயது 49
Tribute
93
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Philadelphia வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த குணநாதன் வினோதினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய்- அம்மா
எங்கள் இதயத்தின் துடிப்பாக
எங்கள் சுவாசத்தின் மூச்சாக
எங்கள் உயிரோடு கலந்து
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
கணவரும், பிள்ளைகளும்