
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Philadelphia வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குணநாதன் வினோதினி அவர்கள் 25-01-2021 திங்கட்கிழமை அன்று Philadelphia வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராசா(ஐயாத்துரை), தேவிமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணநாதன்(தில்லை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீபன்(Steven), ஜனார்த்தன்(Jenojan), ஜெயசுபா(Jeshua) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமு சுயன்தினி, காலஞ்சென்ற செல்வன் குமரன் ஆகியோரின் அன்புமிகு சகோதரியும்,
சச்சிதானந்தசிவம், பேரின்பநாதன், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பேரின்பவதி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.