Clicky

45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 03 MAY 1991
இறப்பு 22 JAN 2024
அமரர் குமுதினி சயந்தன் (குமுதா)
வயது 32
அமரர் குமுதினி சயந்தன் 1991 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கிளிநொச்சி திருவையாற்றைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமுதினி சயந்தன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் இதயத்தின் நினைவுகளாய்
சிந்திடும் கண்ணீர் துளிகள்...!
உயிர் காற்றே சொல்லு
மெய் போகுமிடம் அறிவாயா
இறையாற்றின் உண்மை
அறிந்த மனம் உருகாதே..!
கருவிலே உதிர்ந்தவள்
கடைசியாய் வந்தவள்
உறவிலே தவழ்ந்தவள்
உயிரை ஏன் மாய்த்ததேன்..!
உறவுகள் பலம் பெற
உறுதியாய் நின்றவள்
ரத்த பாசத்தின் தீயிலே
உருகிடும் உயிரவள்..!
வாழ்க்கையின் ஓடமே
அன்பெனும் அறத்திலே
உயிர் மொழி வார்த்தைகள்
இதயங்கள் அறியுமோ..!
உண்மையின் பிம்பங்கள்
உயிர்கள்தான் அறியுமா
சொற்றொடர் யாவுமே
தீவினை ஆற்றுமே..!
காலத்தின் கைகளில்
ஆடிடும் மனிதமே
இறையருள் தொன்மையுள்
யாதுமே தீயினுள் சாம்பலே..!
காலம் என்பதன்
மேடை நாடகத்தில்
உயிர் வந்து
போவதன் மாயமென்ன..!
சுத்தும் பூமிக்கும்
காலம் உண்டு
ஒளி தீபமாகும்
இறை வின்பங்கள்..!
அறிவுத் ஞானத்தில்
இறையின் வின்பங்கள்
இருள்கள் சூழ்ந்ததன்
மாயமென்ன..!
மனித வாழ்க்கைக்கும்
காலம் உண்டு
வந்து போகும்
உயிர்கள் அறியாதோ..!
மெய்யறிவே ஓரிடத்தில்
கதை செம்மை செய்யும் வேறிடத்தில்
பக்தியிலே பரவசமாம்
தனையறியா உள்ளகளே
இறை வடிவம்தான்
மனித உயிரென
என்றுதான் உணருமோ..!
பரமது சேரும் இறையது உயிரே...
இருகை கூப்பி வணங்குகிறோம்...
உறவுகள் மனமது அறிவினில் மலர்ந்திட...
அன்பினை உணர்ந்து அறவாழ்வு செழித்திட...
இறை அருளோடு சேர்ந்து எம்மை வாழ்த்துவாயா ..!
வணங்கி நிற்கும்...
அப்பா அம்மா
உடன்பிறந்த பாசஉயிர்கள்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

அகாலமரணம் Thu, 25 Jan, 2024