யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரு கனகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பினை சொரிந்து ஆளாக்கிய அப்பா
இம்மாநிலத்தில்எமை வாழ்வித்த கோயிலே
கண்போல் எங்களை காத்து வளர்த்தீர்களே
காலமெல்லாம் பிள்ளைகள் உயர்வுக் காய்
ஓயாது உறங்காது உழைத்ததை நினைந்து
கண்கள் நித்தம் கண்ணீரால் நிறைகின்றதே
மாதம் ஒன்று ஓடிமறைந்திட்டாலும்
எம்மனங்களில்
நீக்கமற நிறைந்திருப்பீர்கள்
அப்பா ........
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.