யாழ், கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா நீவார்க், நியூ ஜேர்சி(Newark, New Jersey) மற்றும் கனடா வினிபெக்(Winnipeg) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசூரியர் ஜெயந்தன் அவர்களின் நன்றி நவிலல்.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல்
எம்மை காத்து நின்றாயப்பா
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து 31 நாட்கள் போயும்
மறுபடி வராததேனோ?
உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
இன்றும் உன் நிழலாடும்
நினைவுகளில் வாழும்
மனைவி, பிள்ளைகள். !
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
My heartfelt condolences to Jayanthy & family during this difficult time. May his soul Rest In Peace