Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 23 MAY 1947
மறைவு 11 JUN 2017
அமரர் குமாரசாமி சிவன்செயல்
வயது 70
அமரர் குமாரசாமி சிவன்செயல் 1947 - 2017 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, அளவெட்டி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவன்செயல் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஆறு அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவுகள் எம் அடிமனதில்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா

அன்பாலும் பண்பாலும் எமை கவர்ந்த
பண்பு நிறைந்த தாயே பாசத்தின் ஊற்றே
துன்பத்தை உனக்குள் புதைத்து இன்பத்தை எமக்குள்
விதைத்த தாயே உன் நினைவால் துடிக்கின்றோம்!
தவிக்கின்றோம் இன்றுவரை நாமம்மா

எல்லா நினைவுகளும் நீங்களாகி
உங்கள் உயிர் உள்ளவரை வாழ்ந்தோம்
இப்போ ஆறாத ரணங்களுடன் ஆயிரம்
இரவுகள் அழுதாலும் பிரிவின் துயர் குறையவில்லை
உன் அன்பு முகம் மறக்கமுடியவில்லை!

ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும் நிகர் உண்டோ
அம்மா மீண்டும் நீ உதித்து உன்
அழகு முகம் தோன்றாதோ என
விழித்துக் கொண்டு இருகின்றோம் அம்மா
அன்பின் கதகதப்பும் வலிக்காத தண்டனையும்
இனி யார் தருவார் எங்களுக்கு.

தகவல்: குடும்பத்தினர்