

எம் கண்ணீர் அஞ்சலி காலையில் வந்த செய்தி கேட்டு இடிந்து போனோம் ரங்கா... வயதில் சிறியவன் நீ விருட்சமாய் விழுதுகள் தாங்கியவன் .. எம்மை விட்டு விரைந்து போனது ஏனோ? கெட்டிதனமும் சுட்டிதனமும் நிறைந்தவன் மெழுகுவர்த்தியாய் எரிந்து போனாயே.. உன் பிரிவால் உறைத்து போனோமே ரங்கா காந்த கண்ணால் எல்லோரையும் கவர்த்து இருந்தாய். காலனவன் கண பொழுதில் உன்னை கவர்ந்தது ஏனோ ரங்கா ? அம்மா தம்பிவுடன் நானும் கூட வாரேன் என தாய் மடியில் தலை சாய்க்க சென்றாயா ரங்கா? மீளாத சோகம் தந்து போனாயே.. ஏற்க மறுக்கிறது நீ இவ் உலகில் இல்லை என்ற செய்தி கேட்க பொய்யாகி போகாத நீ எம்மை விட்டு போன செய்தி. ... துடியாய் துடிக்கிறோம் வேதனையில் விம்மி வெடிக்கிறது நெஞ்சம் ஐயா .. தாய் மடியில் தலை வைத்து தூங்கு கண்ணா அமைதியாய் தூங்கு ரங்கா.. உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். சாந்தி!சாந்தி!சாந்தி உன் பிரிவால் வாடும் உனது குடும்பதவர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.... சின்னத்தம்பி மாமா குடும்பம் கனடா, ஜெர்மனி, ஸ்ரீலங்கா

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வோண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ?? Mr&mrs. PushparajShyamala Thilagarani Iyathurai Canada