யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்
எமக்கு பார்த்துப் பார்த்து பலதும் செய்தீர்களே
பாதியிலே உங்கள் வாழ்வு முடிய கண் வைத்தது யாரோ?
அப்பா அப்பா என எல்லாவற்றிற்கும் தேடும் பிள்ளைகளை
தேற்றும் வழி தெரியாது தவிக்கின்றேனே!
எத்தனை ஆசைகள்! எத்தனை கனவுகள்!
எல்லாம் ஒரு நொடியிற்குள் நொருங்கிப் போனதே
இது தான் வாழ்க்கையென எழுதிவைத்த இறைவனின்
தத்துவங்கள் புரிந்தும் தவிக்கின்றதே எங்கள் உள்ளம்!
என்றும் உம் பிரிவால் வாடும் மனைவி(லலிதா),
பிள்ளைகள்(ரஜிதா, ரஜிபன், கார்தீபன்)
அன்னாரின் 2ம் ஆண்டு திவசக்கிரியை 06-02-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதமும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.