யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க
நாளும் வழிகாட்டிய எம் தந்தையே!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உறுதியின் உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
என்றும் உம் பிரிவால் வாடும் மனைவி(லலிதா),
பிள்ளைகள்(ரஜிதா, ரஜிபன், கார்தீபன்)
அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்ம திதி சாந்தி கிரியை 18-01-2019 வெள்ளிக்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.