யாழ். சாவகச்சேரி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணையை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி நாகேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு போனதய்யா உந்தன்
உருவம் எமைவிட்டு நீங்கி
உலவுதலும் இவ்வுலகை விட்டு நீங்கி
ஓராண்டு போனதய்யா ?
அலகில் சோதியன் அம்பலத்தருகே
அமர்ந்திருக்கும் எம் ஐயனே
எத்தனை ஆண்டுகள் போனால் என்ன ?
எம் இதயத் திரை விட்டு நீங்கிடுமா
உந்தன் நினைவுகள்?
நித்தம் நித்திலமாய்
நின்றுலவும் தரிசனம் தான் விலகுமா?
புளியம் பொக்கணையின் பொக்கிஷமாய் உதித்தவரே !
உளி கொண்டு வாழ்வை கச்சிதமாய் வடித்தவரே!
அழியாப் புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவரே-- எமை
வாழவைத்தவரே!
முதல் ஆண்டு போனதப்பா?
தெளிந்தஞானமாய் எம் முதலே நீதானே அப்பா
வாழ்வின் முன்னுரையும் நீ தானே அப்பா
அதற்கு முடிவுரை உண்டோ அப்பா !
பளிச்சிடும் படிகமாய் எம்வாழ்வினில்
வழி காட்டிடும் தீபமே நீ தான் அப்பா
ஆம்அணையாத தீபமாய்த் தான் எம்முயிர் உள்ளவரை
துணையாக என்றும் கலங்கரை விளக்கமதாய்
சுடர்வாய் என்றும் எம் ஆயுள் உள்ளவரை
தெய்வத்துள் தெய்வமாய் உறைந்த எம் தெய்வமே
வையகம் உள்ளவரை வாழ்ந்திருப்பாய் எம் நெஞ்சகமே !
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றோம்.