Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JAN 1932
இறப்பு 05 JAN 2025
திரு குமாரசாமி குணநாயகம்
Retired Civil Engineer(Irrigation Department, Road Development Authority and Road Development Department) & Justice of the Peace
வயது 92
திரு குமாரசாமி குணநாயகம் 1932 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி குணநாயகம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் சிகாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியதேவி, சத்தியபவானி, சத்தியவாணி, திலகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தம்மிக்க, இராமிலன், லம்போதரன், ரஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஷேக், சோனாக்சி, பிரணவன், அபிராமி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம் மற்றும் சொர்ணாம்பிகை, காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி மற்றும் கமலாம்பிகை, லிங்கநாயகம், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மைப்பிள்ளை, சுப்பிரமணியம், கனகம்மா மற்றும் தயாவதி, காலஞ்சென்ற மருதையினார் மற்றும் மங்கையற்கரசி, சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், ஸ்ரீ பத்மநாதன், சுவாமிநாதன் மற்றும் குணநாதன், காலஞ்சென்ற ஜெயநாதன் மற்றும் விஜயலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-01-2025 புதன்கிழமை மற்றும் 09-01-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Mahinda Florist, 531 Galle Road, Mount Lavinia மலர்ச்சாலையிலும், 10-01-2025 வெள்ளிக்கிழமை மற்றும் 11-01-2025 சனிக்கிழமை அன்று இல.21 அம்மன் வீதி, ஆனந்தபுரம் மேற்கு, கிளிநொச்சி  எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலும் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Sathya - மகள்
Thilagan - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்