Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAR 1935
இறப்பு 14 FEB 2024
அமரர் குமாரசாமி கணேசன்
கிராமசேவகர் / ஓவசியர்
வயது 88
அமரர் குமாரசாமி கணேசன் 1935 - 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, உருத்திரபுரம், கனடா மிசிசாகா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி கணேசன்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-03-2025

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே
ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம்
நீங்கள் தானே உங்களுக்கு
நிகர் வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும்
எம் மனம் உறங்கவில்லை
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால்
நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்!!

ஒருமுறையேனும் உங்கள் முகம்
பார்த்து விடமாட்டோமா அப்பா
ஓடி வந்துவிட மாட்டீர்களா?

அப்பா எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos