2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குமாரசாமி கனகமணி
வயது 74
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி கனகமணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு மெல்ல நகர்ந்தது
ஆறாது உம் நினைவுகள்
நீர் சொர்க்கத்தின் வாசலிற்கு சென்றுவிட்டீர்
நாம் சோகத்தில் வாடிக் கிடக்கின்றோம்
எம் இமையோரம் வழியும் கண்ணீர்த் துளிகள்
எமக்குள் ஏக்கங்களாய் வலிக்கின்றது
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றோம் அம்மா!
பிரிவென்ற காலம் ஓடிச்சென்று
இரண்டு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் எண்ணங்கள் தியாகங்கள்
எம்மனக் கூண்டுக்குள்
நிலையாய் உறைந்திட
தொடரும் கண்ணீர்க் கோலங்கள்!
அன்புத் தாயே நீங்கள்
எம்மைவிட்டு பிரிந்தாலும்
எம் உயிர் உள்ளவரை
உங்கள் ஆத்மார்த்தமான வழிகாட்டல்
தொடரட்டும் எம்மிடையே!!!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்