யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, Lyon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் குலப்பிரதாபன் அவர்களின் நன்றி நவிலல்.
என் உயிரே என்னவனே,
என்னை மீறியும் நேசித்தேன்
உன் அன்பை மீறியும் நேசித்தேன்
காலம் காலமென நினைத்த வாழ்க்கை
காணாமல் போனதை எண்ணி கலங்குகிறேன்
என் இதயம் ஒன்றே அறியும்
நீ தந்த பிரிவின் வலி என்னவென்று
ஆயிரம் வார்த்தைகள் பேசுவாய்
ஆருயிராய் என்னை ஆதரித்தாய்
ஆனால் ஓர் வார்த்தை சொல்லாமல் போனதேனோ
என் மனம் கலங்குமென்று நினைத்தாயோ...
பூக்களோடு பூக்களாக வாழ்ந்த நீ
பூ உதிரும் முன் வாடியதேனோ...
நோயென்று வந்ததும்
நோயாக நினைத்ததில்லை
ஊர் உலகம் பார்க்க நீ
மனமுடைந்து நின்றதில்லை
இறுதி வரை உன் மனம் வென்றது
என் மனம் நொந்தது
நீ என்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் என்னை விட்டு
பிரியாது என் உயிரே....
என்னை விட்டு பிரியாது என் ஆருயிரே.....
உன் உயிர் மனைவி
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.