Clicky

தோற்றம் 15 NOV 1952
மறைவு 08 MAY 2025
திரு குழந்தைவேலு இராசலிங்கம்
வயது 72
திரு குழந்தைவேலு இராசலிங்கம் 1952 - 2025 காரைநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivapragasam Shanmugathas 10 MAY 2025 Canada

சித்தப்பா; எங்கள் அப்பு குடும்ப உறவுப்பாலம். அவரில்லாமல் எந்த ஓரு நிகழ்வும் நடந்ததில்லை! எனது திருமணத்தையும் தலைமை தாங்கி நடத்தி வைத்த என்னம்புக்குரியவர்! எப்பவும் "என்ன மாப்பிள்ளை" என்றழைப்பார்! எங்களனைவரையும் விருந்து படைத்து எப்பவும் அன்பு பாராட்டுவார்! ஒரு நாள் கூடக் கோபம் கொண்டதில்லை! கடைசியாக, 2025 வருடப்பிறப்பில் கோல் எடுத்து; உரிமை பாராட்டினார்! அடிக்கடி கதை மாப்பிள்ளை என்றார்! அது தான் நான் சித்தப்பாவுடன் கதைக்கும் கடைசிக் கோல் என்று எனக்குத் தெரியவில்லை! அடுத்தமுறை, விரைவில் அவரைச் சந்திக்கலாம்; ஓன்றாகச் சாப்பிடலாம் என்று கனாக் கண்டிருந்தேன். அதற்குள்; ஏன் இந்த அவசரம்? சித்தப்பா; உங்கள் அன்புக்கு நான் என்றும் அடிமை! அது இன்னும் கிடைக்குமென்று ஏங்குகின்றேன்! ஆனால்; நீங்கள் மீளாத்துயில் கொள்ளுகின்றீர்கள். உங்கள் ஆத்மசாந்திக்காக; எந்தன் கண்ணீரைக் காணிக்கையாக்குகின்றேன். சித்தி, தம்பி, தங்கை மற்றம் குடும்பத்தாருக்கு; எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களும், இரங்கல்களும். அன்புடன், உங்கள் அண்ணன் பிள்ளை(கள்)

Tributes

No Tributes Found Be the first to post a tribute