Clicky

மண்ணில் 11 JUL 1930
விண்ணில் 09 FEB 2021
அமரர் குழந்தைவேலு இராமநாதன்
இளைப்பாறிய வங்கி முகாமையாளர்
வயது 90
அமரர் குழந்தைவேலு இராமநாதன் 1930 - 2021 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kulanthaivelu Ramanathan
1930 - 2021

அன்புக்கும் பண்புக்கும் இலக்கணம் நீங்கள். திருமறைகளுடன் உறவாடி, கம்பராமாயணத்தின் சுவைபருகி, வன விலங்குகள் பற்றிய நூல்கள்பல பயின்று அவற்றை அவ்வப்போது எங்களிடம் சுவைபட விளக்கும் பாங்கினை நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் மனங்களில் பாசமாகப் படிந்துவிட்டீர்கள். சென்ற இளவேனிலுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து கனடாவந்துவிடுவேன் என்று கூறிச்சென்ற நீங்கள் மீளாப் பயணத்தை மேற்கொண்டு பற்றற்றான் பற்றினைப் பற்றிவிட்டீர்கள். அவனருளாலே அவன் தாளில் அமைதிகொள்ளுங்கள். பிரிவால் வாடு உறவுகளுக்கு நாம் கூறும் ஆறுதல் இதுதான்: ‘நெருநல் உளனொருவன் இன்றி ல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு’ .

Tribute by
தி. பாலதாசன்
நண்பர்
மிசிசாகா, ஒன்ராரியோ, கனடா.
Write Tribute