யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், No 114 2ம் ஒழுங்கை பட்டாணிச்சூர் வவுனியா, பிரான்ஸ் பாரிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கனகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது அப்பாவின் 31ம் நாள் நினைவு தினம் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று எமது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் மதியம் 75 avenue jean jaurès 93120 La courneuve எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்று மதிய போசன விருந்துபசார நிகழ்வும் இடம்பெறும். எமது தந்தையார் மீது அன்புகொண்ட அனைத்து உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோரும் இன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா ஈடேற்றத்துக்கு பிரார்த்திப்பதோடு மதிய போசன நிகழ்விலும் பங்கெடுத்துக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
நாள்: 13-12-2024 வெள்ளிக்கிழமை
நேரம்: ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை