முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட குழந்தைவேலு ஜெயநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம் நாம் இங்கு!
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை நிகழ்வு 26-08-2026 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை 4A WEST GROVE, SR7 8EL எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து ந.ப 12.00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை SIX8NINE, STOCKTON RD, HARTLEPOOL TS25 1TX எனும் முகவரி மதியபோசன நிகழ்வு நடைபெறும். அன்னாரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
We express our deepest sympathies, his soul may rest in peace.