
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் விமல்ராஜ் அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கைதடி தெற்கைச் சேர்ந்த குகதாசன் அன்னபூரணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், மீசாலை வடக்கு இராமாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகணேசன்(நில அளவை அதிகாரி), யோகம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
துசி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சபீஷன், ஜர்மிஷன், டலிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
குசந்தன்(களஞ்சிய காப்பாளர் இலங்கைப் போக்குவரத்துச்சபை, வடபிராந்தியம்), மகிந்தன்(லண்டன்), எழில்மதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அகிலா, சுபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2022 திங்கட்கிழமை அன்று மீசாலை வடக்கு இராமாவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details