யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்லூரி வீதி, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தனைச் சிற்பியாய்
சிறந்த நல் மனைவியாய்
வந்தனை செய்தே
நல்வளமான வாழ்வு தந்தாயே!!
என்னை விட்டு எங்கு சென்றாய்?
உந்தனை நினைக்கையிலே
உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறேன்
என் செய்வேன்
எம்தனை தவிக்கவிட்டு
எங்குதான் சென்றாயோ?
ஈராண்டு காலம்
இமைப்பொழுதில் போனதம்மா
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை
அம்மா இவ்வுலகில்!
அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம்
எம் உடலில்
உள்ளவரை
நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள்
எம்முடன் நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால்
மீண்டும் நான் உங்கள் கருவறையில்
புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நான்
தவழ வேண்டும் அம்மா!
வானத்தின் நிலவாய்
வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும்
உங்களுக்கு
எங்களது
நினைவஞ்சலிகள் அம்மா!
Our Deepest Sympathy to her family.