Clicky

மண்ணில் 09 MAR 1956
விண்ணில் 27 NOV 2018
அமரர் குகநேசன் பாலசந்திரன்
(Owner of JMDR & Co- No. 172 Maliban Street, Colombo 11.)
வயது 62
அமரர் குகநேசன் பாலசந்திரன் 1956 - 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 29 NOV 2018 Canada

அண்ணன் இல்லாக் குறை தீர்த்த தமயனே, உறவு முறை போற்றி நின்ற உத்தமனே வாழ்க்கைத் தேடலில் என் வழிகாட்டியே வஞ்சனை செய்தானடா காலன் உன் வாழ்வுதனை காவு செய்து. உங்களுடன் அரசியல் பேச ஆசை, விளையாட்டு கேட்க விருப்பம், ஆன்மிகம் பற்றி பேச ஆனந்தம், ஊர் வம்பு பேச உழமகிழ்ச்சி, வியாபாரம் பற்றி பேச விருப்பமோ விருப்பம், உறவு பற்றி பேச உன்னதம், சொந்த,ம் பற்றிப் பேச சுகமோ சுகம், பேசிக்கொண்டே இருப்பதில் பேரானந்தம். எமக்கு மட்டுமல்ல நீ உறவுக்காரன் வாழ்வின் பரிபூரண பக்கங்களுக்கெல்லாம் நீ சொந்தக்காரன். நீங்கள் இறந்து விட்டாலும் இப்பிறப்பில் உங்களுடன் பழகிக் கொள்ளக் கிடைத்த தருணங்கள் எல்லாம் எமக்கு பக்கபலமானதே, உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள் எல்லாம் எமக்கு வளமானதே, பேசித்திரிந்த நேரமெல்லாம் பொற்காலமே. இவைகள் எல்லாம் இனி வாராது தெய்வமே. உங்கள் ஆன்மா இறைவன் திருவடி சேர நீங்கள் கற்றுத்தந்த ஆன்மீகக் கடவுள்களை எல்லாம் வணங்குகின்றேன். உங்கள் தம்பியாகிய நண்பனுடன் நண்பனாகிய சகோதரன்.