Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAR 1980
இறப்பு 15 MAY 2011
அமரர் கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன்
வயது 31
அமரர் கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன் 1980 - 2011 எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.  

பத்துப் பேருடன் பிறந்து
கூடி வாழ்ந்த - எம் உயிரே
எம் உடன் பிறப்பே

காலம் ஓடி விட்டது
வாழ்க்கையும் மாறி விட்டது
ஆனால் உன் இடம் மட்டும்
யாராலும் நிரப்ப முடியாது
வெறுமையாகவே உள்ளது!

மறக்கச் சொல்லப் பலர் வந்தார்
மறந்து வாழக் காலமும் வந்தது
 ஆனால் எம் உடன்பிறப்பை மறப்பது
 எம் உயிரை மறப்பது போல் அல்லவா?

 பதினைந்து ஆண்டுகள் கடந்தாலும்
 கண்ணீரில் நனைவது  உன் நினைவுகள் அல்லவா?
இன்றும் என்றும் எப்போதும்
 எம் உயிரோடு கலந்துள்ளது உன் நினைவு

உடன்பிறப்பே நீ எம்மை விட்டு நீங்கி
பதினைந்து ஆண்டுகள் ஆனாலும்
 உன் நினைவுகள் மட்டும்
 எம்மை விட்டு நீங்கவில்லை!

காலங்கள் பல காயங்களை
 ஆற்றி விட்டாலும்
 உன்னை இழந்த காயம் மட்டும்
 ஆறவே இல்லையே!

நாம் சேர்ந்து சிரித்த நாட்கள்
 சண்டை போட்ட தருணங்கள்
 பாசமாகப் பேசிய வார்த்தைகள்
 ஒன்றாய் இருந்த இடங்கள்
 அன்பை பொழிந்த நினைவுகள்
 இன்றும் கண் முன்னே வந்து போகிறதே!

தகவல்: குடும்பத்தினர்