

எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணகோபால் கிருஷ்ணகோபன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்... திகழ்ந்த எம் சகோதரனே...!
ஒரு தாயின் வயிற்றில் நாம் ஒன்றாய்ப் பிறந்தோம்
இன்று எம்மை தவிக்கவிட்டு
எங்கே நீசென்றாய்? உடன் பிறப்பே...
உன் உறவே உயர்ந்தென்று இருந்தோம்.
எம் உயிரிலும் உதிரத்திலும் ஒன்றாய் கலந்திருந்தோம்
பாதியிலே நீ எமைவிட்டுப்பிரிய
நாம் துவண்டு விட்டோம்...
புன்னகையோடு காணாமல் போனவனே!
கண்ணீரோடு எம்மை தவிக்கவிட்டுச்சென்றாயே...
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்!!!
அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய்!?
காலங்கள் தேய்திடுனும் உன் நினைவுகள் தேய்ந்திடுமோ?
மீண்டும் வாராயோ உன் பிரிவால்
துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஆறுதல் தாராயோ?
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!!!