யாழ். வட்டுவடக்கு சித்தன்கேணி கற்பகச்சோலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் இராமநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் முகம் எங்கள் மனதில்
என்றும் மறந்ததில்லை...
அன்பின் அப்பா அழியாத ஓவியமே.!
அழைத்து விட்டாரோ
ஆண்டவர் தம்முடனே?
நாட்கள் கடந்தாலும்
ஆறாத உங்கள் பிரிவு
ஆறாய் ஓடுகின்றது
தினம் தினம் எங்களின் கண்களில்!!
உங்கள் பாதக் கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்!!
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.