மட்டுவில் ஊர் தந்த கிருஸ்ணபிள்ளையே! நாள் ஒன்றில் ஓடிப்போனது எங்கே! வடலியூர் அன்னை பெற்றெடுத்த அஞ்சலாதேவியை மணம்புரிந்து, இல்லறத்தில் சிறப்புக்கண்டு வவி,லதா,மோகன் என்னும் பார்போற்றும் பிள்ளைச்செல்வங்களைப் பெற்று இன்புற்று,ஆறு பேரப்பிள்ளைகளையும் கண்குளிரக்கண்டு.... கடமைகள் எல்லாம் முடிந்தது என்று காலனவன் உங்களை அழைத்துவிட்டான் மாமா ! ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இங்கிருக்க எங்கு சென்றீர்கள் மச்சானே! என்று அப்பா புலம்புகின்றார்... குடும்ப உறவுகள் வீழ்ந்துவிடாதிருக்க வேராக இருந்தீர்கள் அண்ணை! மாமியின் மஞ்சள் குங்குமம் அழிந்துவிட்டது மாமா! சுப்பிரமணியம் குடும்பத்தின் மூத்தமருமகன் விண்ணுலகம் சென்றது ஏனோ? கள்ளம் கபடம் அற்ற உள்ளம் ஒன்றை காலனவன் பறித்துவிட்டான்! பிரிவின் வலியை சுமந்து கொண்டு பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டுச்சென்றீர்கள்! பிரிவால் வாடிநிற்கின்ற உள்ளங்களை தேற்ற மொழி இன்றி தவிர்கின்றோம்! உங்களுடைய ஆத்மாசாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்? ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! அன்பான மச்சான் தெய்வேந்திரம் குடும்பத்தினர்