1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 DEC 1944
இறப்பு 19 NOV 2020
அமரர் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்
வயது 75
அமரர் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் 1944 - 2020 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-11-2021

"சேர்வாண்டு சார்வரி கார்த்திகைத் திங்கள் நான்காம் நாள்
பூண்ட பூர்வ பக்‌ஷ பஞ்சமி திதி பூராடத்தில்- பண்புயர்
குணவாளன் கிருஸ்ணபிள்ளை இகம் நீத்து
பற்றினார் வல்லிபுரத்தாழ்வார் பாதக்கமலம்"

நினைவுகளைச் சுமந்து நீந்திக்
கரை சேரத் துடிக்கிறோம்
கனவுகளை கண்டு கண்ணீரால்
நனைந்த நாட்களை நினைக்கிறோம்
மறக்க முடியவில்லை அப்பா...

மாசற்ற மாணிக்கமாய்
மாற்றுக் குறையாத் தங்கமாய்
எங்கள் குடும்பத்துச் சூரியனாய்
கொழுவிருந்து அரசாண்ட மன்னவரே!

நிழல் போலத் தொடர்ந்து வந்து
சுமைகளை நீங்கள் சுமந்து
இமைகளாய் இருந்து எமைக் காத்தீர்கள்
ஓராண்டு ஆயினும் ஆறவில்லை எம் துயரம்

உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 20 Nov, 2020
நன்றி நவிலல் Mon, 14 Dec, 2020