

மட்டக்களப்பு களுதாவளை 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கண்ணகை தம்பதிகளின் ஆசை மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பூமணி, காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், கனகரெத்தினம், வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாருதி, சதீஸ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேந்திர குமார் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஹேமவஹிஷா அவர்களின் ஆசை அம்மப்பாவும் ஆவார்.
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
அப்பா நீங்கள் இறையடி எய்தைதை
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில்
துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2021 திங்கட்கிழமை அன்று களுதாவளை இந்தி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details