நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்
“என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
எம்மையெல்லாம் ஆழத்துயரில் ஆழ்த்திவிட்டு சிவபதம் அடைந்த எம் குலதெய்வம், குடும்பத்தலைவி அமரர் கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் அவர்களின் பிரிவு எம்மையெல்லாம் ஆழத்துயரில் ஆழ்த்தியது.எம்மை விட்டு பிரிந்த எம் குடும்ப விளக்கு, குலதெய்வத்தின் ஆத்ம சாந்திக்கான இறுதிக்கிரியை, அந்தியேட்டி கிரியை இவற்றில் நின்று சிறப்பாக நடத்திய அனைத்து நல்ல உள்ளங்கள், நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் அனைவர்க்கும் எம் வணக்கங்கள். காரணம் தமிழர் பண்பாட்டில் ஒரு துக்கத்தில் உதவியவருக்கு நன்றி கூறுவது அநாகரிகம்.எனவேதான் எம் மனமார்ந்த வணக்கம் சிரம் தாழ்த்துகிறோம்.எம் குலதெய்வம், குடும்பத்தலைவி, அம்மா, மாமி, அப்பம்மா, அம்மம்மா, பூட்டியம்மா, நீங்கள் நிச்சயம் இறைவன் அடியில்தான் என்பது திண்ணம். எனவே உங்கள் ஆத்மாவிற்கு சாந்தி அளித்த இறைவனுக்கு நன்றி கூறும் உங்கள் குடும்பம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இங்ஙனம்,
குடும்பத்தினர்