யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை இராசம்மா கொண்டிருந்த அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-06-2024
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த
துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு
மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவளே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்-
மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் -
எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் அம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!