என் அம்மாவிற்காக நான் எழுதும் சிறு மடல்... அம்மா என்றாலே எல்லோருக்கும் தெய்வம் தான், அது போல என் தாயும் எனக்கு தெய்வம் தான், எமக்காக தன்னை வருத்தி எனது பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்று வைராக்கியத்துடன் எம்மை வழிநடத்தி சென்றார்... ஆயிரம் உறவுகள் இருந்தாலும்பிள்ளைகளுக்கு பெற்ற தாய் போல ஆகுமா.? எம் தாய் பட்ட துன்பமெல்லாம் சிறிது காலம் தான், நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்தார். உங்களது துக்கத்தினால் மிகவும் மனமுடைந்து இருப்பவன் உங்கள் மூத்த மகன் நான் தானம்மா, உங்கள் கையால் பாலூட்டி சோறூட்டி வளர்த்தீங்கள் ஆனால் உங்களிற்கு வாய்க்கரிசி கூட போட முடியாத பாவி நானம்மா.. அம்மாவென்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், உங்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொள்ள முடியாத பாவியை மன்னித்து விடுங்கள். நான் வருவேன் உங்களிடம்... உங்கள் மடி மீது தலை வைத்து உறங்கு வதற்கு... எங்களது உள்ளங்களில் நீங்காது நீடுழி வாழ்வாய் தாயே.
We love and miss you endlessly! You are the most independent woman I have ever met. We are proud that you are our grandma!!! ❤️