யாழ். மாவிட்டபுரம் கீரிமலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ணன் சரஸ்வதி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையினும் 51ம் நாள் வீட்டுக்கிருத்தியம் 25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் மதியம்
12:00 மணியளவில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன
நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
We love and miss you endlessly! You are the most independent woman I have ever met. We are proud that you are our grandma!!! ❤️