அம்மா இன் இறப்பிற்கு பின்னர் என்னிடம் கேட்ட கேள்வி , என்னை தாயகம் கூட்டி கொண்டு போவாயா - 14 நாட்கள் எங்களது தாயகபயணம் அவரின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றி வைத்த இறைவனுக்கு என்றும் நன்றி - தெய்வத்தை நீங்கள் தேடிச் சென்றபோது பக்தியை எண்ணிப் பெருமைப்பட்டேன் - அந்த தெய்வம் உங்களைக் கூட்டிச் சென்றபோது சக்தியை இழந்து வெறுமைப்பட்டோம். எங்களைப் பிரிந்த - உங்கள் ஆத்மா சாந்தியடைய அனைத்தும் செய்வோம் முறையாக உங்களை இழந்த - எங்கள் இதயம் சாந்தியடைய நீங்களே அருள் புரிவீராக. அம்மாவை இழந்தேன் இன்று அப்பாவையும் இழந்தேன் - இறைவனே இனி நீதான் எனக்கு துணை . மகன் - கண்ணன் .
அன்னார் இறைபதம் அடைந்த விபரம் அறிந்து வருந்தினோம் . அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலையும், அமைதியையும் தரவேண்டும்....