Clicky

அன்னை மடியில் 01 APR 1969
ஆண்டவன் அடியில் 18 MAR 2022
அமரர் கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம்
வயது 52
அமரர் கிருஷ்ணகுமார் கிருஷ்ணரட்ணம் 1969 - 2022 மாதகல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
01 APR, 1969
Death
18 MAR, 2022
Late Krishnakumar Krishnaratnam
பூவுலகில் கடமைகளோ முடியவில்லை எமை எல்லாம் இங்கு தவிக்கவிட்டு பொன்னுலக் கேகியதேன் விரைந்து நீயும். உன் பிரிவு செய்தி எமக்கெல்லாம் பேரிடிபோல்வந்ததையா அது கனவாய் இருக்க வேண்டும் நான் கண்விழித்து பார்க்கையிலே எங்கள் குமார் என்முன்னே புன்னகைத்து நிற்க வேண்டும் என்று பாபாவிடம் வேண்டி நின்றேன்.ஆனால் சுவாமியோ என் பக்தன் பாரினிலே செய்த சேவை போதும் இனி என் பாதடியில் வந்து நீயும் சாந்தி பெறும் என்று அவசரமாய் அழைத்து விட்டார். உன் அம்மாவோ கதறிதுடிக்கின்றார். உன் இல்லாளோ குமார் எம்முடன் இனி இல்லை என்று ஏற்க மறுக்கின்றாள் உன்னை தன்னிடமிருந்து பிரிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என பித்து பிடித்தவள்போல் புரண்டு துடிக்கின்றாள். உன் செல்லமகன் சியாமளனோ கடவுள் மேல் கடுப்பாய் இருக்கின்றான். அவர் கருணையின்றி காலனை அனுப்பி என் அப்பாவை கண்ணிமைக்கும் நேரத்தில் காவுகொண்டுவிட்டானென்று. நோடிப்பொழுதுக்கொவருதடவை சியாமளன் சியாமளன் என்று அழைப்பீர்கள் அப்பா உங்கள் இறுதிப்பொழுதினிலே ஏனப்பா என்னை அழைக்கவில்லை என்று தேம்பி தேம்பி அழுகின்றான். கோடைவிடுமுறைக்கு போக தயாரானோமே அப்பா அம்மாவையும் என்னையும் தவிக்கவிட்டு ஏனப்பா நீங்கள் மட்டும் திரும்பமுடியாத தேசத்திற்கு அவசரமாய் போனாயப்பா.உனது உற்ற நண்பர்ரெல்லாம் உன் பெருமை சொல்லி ஓ என்று கதறுகின்றார். உன் உடன்பிறவா சகோத்தரமெல்லாம் நீர் இல்லாத வாழ்வை எண்ணவே முடியாமல் நிலைகுலைந்து தவிக்கின்றார். இறைவனிடம் போராடி உன்உயிரை மீட்டு வர எம்மிடத்தில் சக்தியில்லை ஆதலினால் நாம்மங்கு வரும்வரைக்கும் சுவாமி எங்கள் குமாரை உன் பாதடியில் வைத்து சாந்தி கொடும். ஓம் சாந்தி. ஒம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 21 Mar, 2022
நன்றி நவிலல் Sun, 17 Apr, 2022